Tuesday, August 30, 2005

 
அன்புள்ள மகனுக்கு.
அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடயோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்

அஸ்ஸலாமு அலைக்கும். (உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக)


இறைவன் நன்மைக்கு நல்லருள் புரிவானாக எனது அன்புள்ள மகனுக்கு அன்புடன் தந்தை எழுதிக்கொள்வது நலம் நலம் அறிய ஆவல்.

எழுதும் செய்தியாவது உன்னுடய அன்பு கடிதம் வந்துப்பார்த்துக் கொண்டேன். நீயும் பெரியவனாகி விட்டாய் பெற்றோர்களால் கண்டிக்கின்ற வயதை தாண்டி ஆலோசனை சொல்லி வளர்கின்ற அளவுக்கு. உன் அருகில் இருந்து அலோசனை சொல்லி வளர்க்கின்ற பாக்கியத்தை அல்லாஹ் எனக்குத் தரவில்லை. நன்மை தீமைகளை பிரித்து அரியக் கூடிய அளவுக்கு அறிவின் முதிர்ச்சி அடைந்து இருப்பாய் என நம்புகிறேன் ஆகையினால் இந்த கடிதத்தின் மூலம் உனக்கு சில விசயங்களை சொல்ல நினைக்கின்றேன். இதை எழுதுகின்ற வேலையில் என்னை நல்ல மனிதனாக வளர்த்து ஆளாக்கிய எனது தந்தையை நினைவு கூர்கிறேன். அவர்களுக்கு நல்ஹிதாயத்தை தர அல்லாஹ்விடம் துவா செய்கிறேன். அவர்கள் வாழ்ந்த காலத்தில் மணம் நோகும் படியாக நடந்தமைக்கு இறைவனிடம் மண்னிப்பு கேட்கிறேன். நம்முடய பாவங்களை மண்ணித்தருல அல்லாஹ் போதுமானவன் அல்ஹம்துலில்லாஹ் (எல்லாபுகழும் இறைவனுக்கே.)
இன்றைய சூழ்நிலையில் நாம் எப்படி வாழவேண்டும் என்று கற்றுதருகின்ற மாதிரி சமூகம் இல்லை. சமூகத்திடமிருந்து எப்படி வாழக்கூடாது என்று கற்றுக்கொள்கின்ற சூழ்நிலைதான் உள்ளது. உன்னுடய சிந்தனை எல்லாம் படிப்பின் மீதே இருக்க வேண்டும். நல்ல நன்பர்களுடன் பழகவேண்டும், தொழுகை நேரங்களில் தவறாமல் தொழுகைகு செல்லவேண்டும். பொய், களவு, மற்றவர்களை ஏமற்றுதல் போன்ற பழக்கங்கள் எந்த சந்தர்ப்பத்திழும் உன்னுடய செயலிலும் சிந்தனையிலும் ஏற்படாதிருக்க வேண்டும். உயர்ந்த கல்வி மட்டுமே ஒரு மனிதனை குடும்பத்திழும் சமுகத்திழும் நல்லவனாகவும் அந்தஸ்து உள்ளவனாகவும் ஆக்கிவிடாது அவனுடய நல்ல சிந்தனை, இறை நம்பிக்கை, இறை அச்சம், நன்நடத்தை, நல்ல பழக்கங்களும், தூயஎண்னம், எல்லோரிடமும் அன்புடனும் மரியதையுடனும் இறக்கமுடனும் நடந்துகொள்வது போன்ற நற்செயல்கள் அமையப்பெற்றால் குடும்பத்தில் மட்டுமல்லாது சமுகத்திலும் நல்லமனிதனாக மதிக்கப்படுவான். அபப்டிபட்ட நல்ல மனிதர்களாக என்னுடய குழந்தைகளாகிய நீங்களும் வரவேண்டும் என்று ஆசைப்படுகின்றேன் இறைவனிடம் துவாசெய்கின்றேன். உன்னுடய ஒவ்வொரு செயலும் எங்களை மகிழ்ச்சி கொள்ளக்கூடியதாகவும் சந்தோஷமடைய செய்வதாகவுமேயன்றி எங்களை தலைகுனியச் செய்யகூடியதாக இருக்கக்கூடாது. எங்கள் ஆயுள் உள்ளவரை உங்களை சபிக்காது எப்போதும் வாழ்த்தக்கூடிய பெற்றோர்களாக எங்களை ஆக்கி அருள் புரிய எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துவாசெய்கிறேன்.
நீங்கள் சீரோடும் சிறப்போடும் செழிப்போடும் சந்தோசத்தோடும் வாழ்வதை காணக்கூடிய பாக்கியத்தை அல்லாஹ் எங்களுக்கு தந்தருள துவா செய்கிறேன். உன்னுடய ஒவ்வொரு செயல்களையும் இறைவன் பார்த்துக்கொண்டு இருக்கிறான் என்ற அச்சம் எப்போதும் உன் சிந்தனையில் இருக்கவேண்டும். இதை நீ மனதில் உறுதியுடன் ஏற்றுக்கொண்டால் எந்தசக்தியாலும் உன்னை வழிகெடுக்க முடியாது.

யா அல்லாஹ் எங்கள் குழந்தைகளுக்கு நல்ல அறிவையும் நல்ல கல்வியையும் நல்ல ஈமானையும் நல்ல பழக்கங்களையும் நீண்ட ஆயுளையும் நல்லசுகத்தையும் நிறைந்த செல்வங்களையும் நல்ல ஒழுக்கத்தையும் தந்து தீய்ய செயல்களில் இருந்தும் தீய்யவர்களின் தொந்தரவிலிருந்தும் பாதுகாத்து
எங்களுடய வருவாயையும் உணவினையும் செயல்களையும் ஹலாலானதாக ஆக்கி அருள் புரிவாய் அல்லாஹ் என வேண்டி நிறைவு செய்கிறேன்.
அஸ்ஸலாமு அலைக்கும். (உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாகா)

அன்புடன்
உன் நலமான நீண்ட ஆயுள் நாடும்
அன்புத் தந்தை.

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]