Thursday, September 09, 2010

 
‘பிறை’ ஜாக்கின் பிழை

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்புச் சகோதர, சகோதரிகளே



உங்களில் எவர் அந்த மாதத்தை அடைகிறாரோ அவர் நோன்பு வைக்கட்டும் (அல்குர்ஆன் 2:185)



நீங்கள் பிறை பார்த்தால் நோன்பு வையுங்கள், அடுத்த பிறையைப் பார்த்தால் நோன்பை விட்டு விடுங்கள், மேகம் (பிறையை) உங்களுக்கு மறைத்து விடுமானால் (ரமளானையும் ஷாஃபானையும்) முப்பது நாட்களாகப் பூர்த்தி செய்து கொள்ளுங்கள், என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், இப்னு உமர் (ரலி) நூல்கள்- புகாரி, முஸ்லிம், அஹ்மத், நஸயீ, இப்னுமாஜா, திர்மிதீ, தாரகுத்னீ, இப்னுஹிப்பான், இப்னுகுஸைமா, ஹாகீம்.


மேகம் (பிறையை) உங்களுக்கு மறைத்து விடுமானால் பக்கத்து பிரதேசங்களில் பிறை தென்பட்டதா என்று கேட்டு அறிந்து கொள்ளுங்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறவில்லை.


”ரமலான் பிறையை நீங்கள் காணும் வரை நோன்பு நோற்காதீர்கள்; (மறு) பிறையைக் காணும்வரை நோன்பை விடாதீர்கள்; உங்களுக்கு மேக மூட்டம் தென்படுமானால் (முப்பது நாள்களாக) அதைக் கணித்துக் கொள்ளுங்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 1906 அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி).



“நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (மினாவில்) இருந்து கொண்டிருந்தபோது சந்திரன் பிளவுபட்டு இரண்டு துண்டுகளாக மாறிற்று . அப்போது நபி(ஸல்) அவர்கள் எங்களிடம், ‘நீங்கள் சாட்சியாக இருங்கள். நீங்கள் சாட்சியாக இருங்கள்’ என்று (இரண்டு முறை) கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) நூல் : புகாரி 3636,4864,4865.



”பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள்; பிறையைப் பார்த்து நோன்பு விடுங்கள்! உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஅபான் மாதத்தை முப்பது நாள்களாக முழுமைப் படுத்துங்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி: 1909 அபூஹுரைரா (ரலி).

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘மாதம் என்பது இப்படியும், இப்படியும், இப்படியும் இருக்கும்” என்று (இரண்டு கைகளையும் மும்முறை விரித்துக் காட்டி) முப்பது நாள் எனச் சொல்லிவிட்டு, பிறகு ‘மேலும் இப்படியும், இப்படியும், இப்படியும் இருக்கலாம்” (என்று இரண்டு கைகளையும் மும்முறை விரித்துக் காட்டி மூன்றாம் முறை பெருவிரலை மடக்கியபடி) – இருபத்தொன்பது நாள்களாகவும் இருக்கலாம் என்று கூறினார்கள். அதாவது (மாதம் என்பது,) சில வேளை முப்பது நாள்களாக இருக்கும்; மற்ற சில வேளை’ இருபத்தொன்பது நாள்களாக இருக்கும் என்று கூறினார்கள். புஹாரி :5302 இப்னு உமர் (ரலி).





உம்மு பள்ல்(ரலி) அவர்கள் என்னை சிரியாவிலிருந்த முஆவியா(ரலி) அவர்களிடம் அனுப்பி வைத்தார்கள். நான் அங்கு சென்றதும் ரமளானின் முதல் பிறையை வெள்ளிக்கிழமை இரவு பார்த்தேன். அம்மாத கடைசியில் நான் மதீனாவிற்கு வந்தேன். பிறைப் பற்றிய என்னிடம் கேட்டார்கள். 'நாங்கள் வெள்ளிக்கிழமை இரவு பிறைப் பார்த்தோம்' என்று கூறினேன். நீயே பிறையைப் பாரத்தாயா.. என்றார்கள். ஆம் மக்களும் பார்த்தார்கள் - முஆவியா அவர்களும் பார்த்தார்கள் எல்லோரும் நோன்பு பிடித்தோம் என்று கூறினேன். அதற்கவர்கள் 'நாங்கள் சனிக்கிழமை இரவு தான் பிறையைப் பார்த்தோம் எனவே மறு பிறையை பார்க்கும் வரை நாங்கள் நோன்பு வைப்போம் என்றார்கள். முஆவியாவும் நாங்களும் பிறைப் பார்த்தது உங்களுக்குப் போதாதா... என்று கேட்டேன். போதாது நபி(ஸல்) எங்களுக்கு இப்படித்தான் கட்டளையிட்டார்கள் என்று கூறினார்கள். (குரைப் - முஸ்லிம்)

இப்போது ஜாக் இயக்கத்தை சார்ந்தவர்கள் சவுதி அரேபியாவில் பிறை பார்த்தால் போதும் நமக்கும் அது பொருந்தும் என்று சொல்லுகிறார்கள். அதாவது ‘சர்வதேச பிறை’.ஆனால் இந்தவருடம்(9/9/2010) துபாயில் பிறை தென்படவில்லை ஆகையால் வெள்ளிகிழமை பெருநாள் என்று அறிவிக்கிறார்கள் சவுதி அரேபியாவில் பிறை தென்பட்டதா என்று அறிய நம் தமிழகத்து மேதாவிகள் போல் அவர்கள் காத்திருக்கவில்லை, அதன்பிற‌குதான் சவுதி அரேபியாவிலும் வெள்ளிகிழமை பெருநாள் என்று அறிவிக்கிறார்கள் துபைக்கும் சவுதிக்கும் ஒருமனி நேரம் வித்தியசம் உண்டு, துபையில் ஏரத்தாள‌ ஒருமணிநேரம் முன்பே சூரியன் அஸ்தமணமாகி இருக்கும் பிறை தென்படவில்லை சவுதியின் அறிவிப்புக்கா காத்திருக்காமல் உடனே வெள்ளிகிழமை பெருநாள் என்று அவர்கள் அறிவிப்பு செய்கிறார்கள் அதற்குபிறகுதான் சவுதியின் அறிவிப்பு வறுகிறது. சுமார் இந்திய நேரம் இரவு 9.30 மனிக்கு துபையில் தராவிஹ் எனும் இரவுத்தோழுகை நடக்கிறது நம்தமிழகத்தில் ஜாக் இயக்கத்தை சார்ந்தவர்கள் இரவு 10.00மனிவரை சவுதியின் அறிவிப்புக்காக காத்திருக்கிறார்கள்.
 இதில் முக்கியமக நாம் சிந்திக்கவேண்டியதும் கவணிக்ககூடியதுனமான ஒரு விசயம் உள்ளது அதாவது சவுதியில் சூரியன் அஸ்தமித்தவுடன் உலகம் முழுவதும் இருண்டு விடப்போவதில்லை சிரிது நேரத்தில் வேறு ஏதாவது பகுதியில் அல்லது வேறு ஏதாவது ஒரு நாட்டில் சூரியன் மறையும் அங்கு பிறை தெரியவாய்ப்பு உள்ளது இப்படி தொடர்ச்சியாக நடை பெற்றுக்கொண்டுதான் இருக்கும் ஆனால் நம் தமிழகத்து அறிவு ஜீவிகளைபோல் மூன்று மணி நேரம் நான்கு மணி நேரம் சவுதிகள் கத்திருக்கவில்லை , சூரியன் மறைந்து விட்டது பிறை தெரியவில்லை பக்கத்தில் யாரும் பிறைபார்த்தாக தகவலும் சொல்லவில்லை இதற்க்குமேல் இங்கு பிறை தெரியவாய்ப்பில்லை என்றவுடன்

வெள்ளிக்கிழமை பெருநாள் என்று அறிவித்துவிட்டர்கள்.

 ‘சர்வதேச பிறை’ என்பது ஒரு முட்டால்தனமான வாதம் என்பது இவர்கள் முன்னுதாரனமாக எடுத்துக்காட்டும் சவுதியின் செயலிலிருந்து விளங்கமுடிகிறது .ஆக இவர்களின் கூற்று கதீஸுக்கும் முரண்பாடாக உள்ளது நம்முடய சிந்தனைக்கும் ஏற்புடடயதாகஇல்லை.

நீங்கள் பிறை பார்த்தால் நோன்பு வையுங்கள், அடுத்த பிறையைப் பார்த்தால் நோன்பை விட்டு விடுங்கள், மேகம் (பிறையை) உங்களுக்கு மறைத்து விடுமானால் (ரமளானையும் ஷாஃபானையும்) முப்பது நாட்களாகப் பூர்த்தி செய்து கொள்ளுங்கள், என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.




    
சர்வதேச பிறை’ என்பதும் ஏமாற்றுவேலை என்பது இவர்களின் செயல்கள் உருதி செய்கிறது, எப்படி என்றால் சவுதியில் பிறை தென்படவில்லை சவுதியின் மேற்கு பகுதியில் உள்ள பிரதேசங்களில் மஹ்ரிப்நேரம் தாமதமாகும் அதற்குமேற்கே இன்னும் தாமதமாகும் , அதற்குமேற்கே இன்னும் தாமதமாகும் இப்படி மேற்கேசெல்ல செல்ல இன்னும் தாமதமாகும் இப்படி இருக்கும்போது சவுதியின் மேற்கு பகுதியில் உள்ள பிரதேசங்களில் பிறை தென்பட்டதா என்று அறிய முயற்சிக்காமல் சவுதியில் வெள்ளிக்கிழமை பெருநாள் என்று அரிவித்தவுடன் இவர்கள் தங்கள் நிலையை மாற்றிக்கொண்டார்களே ஏன் சவுதிவரைதான் எல்லை என்று எந்த நபி மொழியைக்கொண்டு உறுதி செய்தார்கள் அல்லது எந்த இறை வசனத்தை ஆதரமாகக்கொண்டு முடிவு செய்தார்கள். சர்வதேச பிறை’என்றால் உலகில் வேறு எதாவது பகுதியில் பிறை தென்பட்டதா என்று அறிய முயற்சிக்காமல் 9/9/2010 வியாழக்கிழமை பெருநாள் என்ற முன்னறிவிப்பை மற்றிக்கொண்டது ஏன்? இப்பொழுது புரிகிரதா சர்வதேச பிறை’ என்பதும் ஏமாற்றுவேலை என்று. 
 
உம் இறைவன் மேல் சத்தியமாக, அவர்கள் தங்களிடையே எழுந்த சச்சரவுகளில் உம்மை நீதிபதியாக, ஏற்றுப் பின்னர் நீர் தீர்ப்பு செய்தது பற்றி எத்தகைய அதிருப்தியையும் தம் மனங்களில் கொள்ளாது (அத்தீர்ப்பை) முற்றிலும் ஏற்றுக் கொள்ளாத வரையில், அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் ஆகமாட்டார்கள். (அல்குர்ஆன் 4:65)
 
அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!


அல்ஹம்துலில்லாஹ்.

அனைவருக்கும் என்னுடைய இனிய ஈத் முபாரக்.. பெருநாள் வாழ்த்துக்கள்..

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]