Wednesday, July 06, 2005

 
நெஞ்சு பொறுக்குதில்லையே

மகாத்மா காந்தி எழுதிய சுயசரிதை புத்தகத்தின் பெயர் என்ன?
மகாத்மா காந்தியின் தந்தையின் பெயர் என்ன?
தமிழகத்தில் உப்பு சத்தியாக்கிரக போராட்டம் யார் தலைமையில் நடை பெற்றது?
பெருந்தலைவர் என்று யாரை குறிப்பிடுகின்றோம்?
இந்தியா சுதந்திரம் அடைந்தது எந்தவருடம் எந்தமாதம் என்னதேதி?
இந்தியாவின் இரும்பு மனிதர் யார்?
இந்தகேள்விகளை வேருநாட்டவர்களிடம் கேட்கவில்லை,
நம்தமிழகத்து மக்களிடம் கேட்கப்பட்டது பெரும்பலோருக்கு பதில் தெரியவில்லை. இந்த நிகழ்ச்சியை 29/6/2005 சென்னை பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்து நம்நாட்டு மக்களின் தேசபக்தியை வெளிச்சம் போட்டுக்காட்டினார்கள். இதில் கொடுமை என்னவென்றாள் பெரும்பாலனவர்கள் ஆசிரியர்கள் (பதில் சொன்ன ஒரு சிலரில் ஆசிரியர்களும் உண்டு) மற்றும் படித்தவர்கள். ஒரு ஆசிரியையிடம் கேட்கப்பட்டகேள்வி மகாத்மா காந்தி எழுதிய சுயசரிதை புத்தகத்தின் பெயர் என்ன? சிரித்துகொண்டே தெரியாது என்று கூறினார், கேள்வி கேட்ட பென்மனி,

டிச்சர் என்று சொல்கிறீர்கள் பதில் தெரியவில்லையே - அதற்கு ஆசிரியையின் பதில் நான் கணக்கு டிச்சர் என்று வெட்கமின்றி பதில் சொன்னது அதைவிடக்கொடுமை. வேலைதேடும் பட்டதாரி இளைஞகரிடம் கேட்கப்பட்டது - பதில் தெரியவில்லை. கேள்வி கேட்ட பென்மனி - வேலைக்கான இண்டர்வியுவில் இது பொன்ற கேள்வி கேட்டால் எப்படி பதில் சொல்வீர்கள் - அவரின் பதில் இப்பொழுதுதான் ஜெனரல் நாலெஜ் படித்துக்கொண்டு இருக்கிறேன். நம்தேசத்தை பத்திகூட இனிமேல்தான் படித்துதெரிந்து கொள்ளவேண்டுமாம். நம்மக்கள் பெரும்பலோருக்கு பதில் தெரியது என்ற நம்பிக்கையில் தான் சரியாக பதில் சொன்னால் பரிசு என்று அறிவித்து இருந்தார்கள்.

இந்த நிலமைக்கு காரனம் என்ன என்று சிந்தித்து பார்த்தோம் என்றால் நம்முடைய மீடியக்களாகிய சின்னத்திரை, மற்றும் பத்திரிக்கைகள்தான் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இருக்கமுடியாது. குடியரசுதினம், சுதந்திரதினம் போன்ற நாட்களிளும் கூட திரைப்பட காட்சிகள், திரைப்பட நடிகர், நடிகைகளின் பேட்டிகள். ஏனென்றால் இவர்கள்தான் இந்தியாவின் சுதந்திரத்திற்கு பாடுபட்டவர்கள். இந்திய தேசத்தை பற்றியோ, இந்திய தேசத்தின் சுதந்திரப்போராட்ட வரலாறு பற்றியோ எப்பவாவது ஒளிபரப்பு செய்து இருப்பர்களா?

எல என்ன சொல்லுதே,

படிக்கும் போது பள்ளிக்கூடத்ள சொல்லிக்குடுத்துருப்பாவல்ல.

அய்யா சின்னத்திரையின் சீரியல் சுனாமிகள் எங்க மூலையை ஆக்கிரமித்துக்கொண்டதால் படிச்சது மரந்து போச்சுங்கோ.

Monday, July 04, 2005

 


இது ஹதீஸ் இல்லிங்கோ என் கருத்துங்கோ

வாழ்த்துக்கள்

நான் தமிழ்மணத்திற்கு புதியவன்.அதிரைநன்பரின் மூலமாக அதிரைக்கரான் எழுத்துக்களை வாசிப்பதற்காக வந்தவன். அத்துடன் இஸ்லாம் பற்றிய விவாதங்கலையும் வாசிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அது விசயமாக மனதில்பட்ட சிலவற்றை பதிவுசெய்ய விரும்புகிறேன். வாய்ப்பு தந்த தமிழ்மணத்திற்கு வாழ்த்துக்கள். சகோதரர் நேசக்குமார் அவர்கள் கஃபாவில் ஏன் முஸ்லீம்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர் என்ற கேள்வியை எழுப்பி இருந்தார். சகோதரர் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் கஃபா என்பது இறைவனை வணங்குவதற்கான ஆலயம், சுற்றுலா தலமல்ல. இறைவனையும் இறைவனுடைய தூதர் முகமது நபியவர்களையும் ஏற்று கொண்டவர் களுக்கு எந்த தடையுமில்லை. இஸ்லாமிய கொள்கைப்படி உலகில் உள்ள அணைத்து மனிதர்களும் ஆதமுடைய மக்களே இறைவன் சன்னதியில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் கருப்பன் வெள்ளையன் என்றவித்தியசம் கிடையது, மேல்நாட்டுக்கரன் கீழ்நட்டுகாரன் என்ற வேருபாடும் கிடையது. நாடு என்பதுகூட் மனிதர்கள் போட்டுக்கொண்ட கோடுதான். எப்படி இந்தியா என்ற ஒருநாடு இந்தியா, பாக்கிஸ்தான், பங்காளதேசம் என்று கோடு போட்டுக்கொண்டர்களோ அதுபோல். எல்லோரும் ஆதமுடை மக்கள்தானே ஏன் எல்லோரையும் கஃபாவுக்கு செல்ல அனும்திப்பதில்லை என்ற கேள்வி எழலாம் மனிதனை படைத்ததின் நோக்கம் படைத்த இறைவனை வணங்குவதற்காக அவனைமட்டும் வனங்குவதற்காக மாறாக மனிதன் படைத்தவனை வணங்குவதற்கு பதிலாக இறைவனால் படைத்தவற்றை வணங்க ஆரம்பித்தான். அவர்களை நேர்வழி படுத்துவதற்காகத்தான் பல இறைத்தூதர்களை அனுப்பியதாக திருமறை குர்ஆனில் இறைவன் கூறுகிறான். குர்ஆனில் சொல்லப்பட்ட வசனங்கள் அனைத்தும் எல்லாக்காலத்தும் பொருந்தகூடியதாகவும், பலதரப்பட்ட எண்ணங்களை உடைய மனிதர்களை கருத்தில் கொண்டே ஒவ்வொரு வசனமும் அருளப்பட்டுள்ளது. படைத்த இறைவன் எல்லாம் அறிந்தவன். கஃபா என்ற ஆலயம் உலகில் இறைவனை வணங்குவதற்காக கட்டப்பட்ட முதல் வணக்கஸ்தலம். இதை ஏற்றுக்கொண்ட முஸ்லிம்கள் கஃபாவிற்கு சென்று இறைவனை வணங்குவதை புனிதமாக கருதுகிறார்கள். இப்பொழுது எல்லா மதத்தினரையும் கஃபாவிற்கு செல்ல அனுமதித்தால் சகோதரர் நேசக்குமார் போன்ற நல்லவர்களாக எல்லோரும் இருக்கமாட்டர்கள். உலக பயங்கரவாதி நரேந்திரமோடி, தொகாடியா போன்றவர்கள் சென்று ஏதும் குழப்பங்கலை ஏற்படுத்திவிடக்கூடாது என்றும், அசோக் சிங்கால், ராமகோபலன் போன்ற்வர்கள் சாணத்தை கொண்டுவைத்துவிட்டு இங்குதான் பிள்ளையார் பிறந்தார் என்றும் கூறிவிடக்கூடாதே என்றும் எண்ணித்தான் இஸ்லாம் அல்லாதவர்கள் கஃபாவிற்கு செல்ல இறைவன் அனுமதி மறுத்திருக்கிறான். இப்பொழுதும் கூட வேலைக்காக சவுதி அரேபியா செல்லும் மாற்றுமத சகோதரர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு கஃபாவிற்கு சென்றுவருகிரார்கள் இஸ்லாமிய பெயரில் பாஸ்போட் எடுத்து சவுதி வரும்மாற்றுமத சகோதரர்களும் கஃபாவிற்கு சென்றுவருகிரார்கள் அவர்களின் உள்ளங்களை அல்லாஹ் அறிந்தவனாக இருக்கிறான். கஃபாவிற்கு கார்டியனக ஒரு இந்தியரோ, அல்லது ஒருகருப்பரோ இருக்கமுடியுமா என்றகேள்வியையும் சகோதரர் எழுப்பியுள்ளர். கஃபா ஆலயம் சவுதி அரேபியாவில் உள்ளது கஃபாவை பராமரிப்பது, அங்குவரும் எல்லாப்பகுதி இஸ்லாமியர்களுக்கும் தேவையான வசதிகளை செய்து கொடுப்பது அங்குள்ள அரசாங்கத்தின் கடமை. அங்கு நடப்பது மன்னர் ஆட்சி ஆகவே கஃபாவின் பராமரிப்பு பொருப்பை மன்னர் ஏற்றுக்கொண்டுள்ளார். பின்பொரு காலத்தில் அங்கு மக்கள் ஆட்சி ஏற்பட்டால் மக்கள் ஆட்சிக்கு யார் தலைமை வகிக்கின்றாரோ அவர் அந்த பொருப்பை வகிப்பார். சவுதி அரேபியாவின் மன்னர் பொருப்பில் இந்தியர் இருக்கமுடியுமா என்று கேட்பதை நம் அறிவு ஏற்றுக்கொள்ளவில்லையோ அதுப்போன்றுதான் இந்த வாதமும்.

மன்னர் கார்டியனக இருப்பதால் அவருக்கென்று விசேச தொழுகையோ விசேச பிரர்த்தணையோ நடப்பது கிடையது,எல்லா இஸ்லாமியர்கழும் தொழுகின்ற நேரத்தில்தான் அவரும் தொழவேண்டும் அவருக்கு முன்னல் நிற்பவரின் கால் அருகில்தான் தலைவைத்து சஜ்தாசெய்யவேண்டும்.

இஸ்லாமிய மார்க்கத்தை இஸ்லாமியர்களின் செயல்களை வைத்து மதிப்பீடு செய்யகூடாது முக்கியமாக இந்தியாவில் உள்ள முஸ்லீம்களை வைத்து. காரணம் இந்தியாவில் உள்ள முஸ்லீம்கள் இஸ்லாத்தினால் ஈர்க்கப்பட்டவர்கள் என்பதை விட இஸ்லாத்தின் மீது தள்ளப்பட்டவர்கள் அல்லது இஸ்லாத்தின் மீது தினிக்கப்பட்டவர்கள் என்றால் அது மிகைஆகாது. இஸ்லாத்தை அறிந்து இஸ்லாமிய சட்டதிட்டங்களை அறிந்து குர்ஆனை படித்து அதன் நன்மைகளை தெரிந்து இஸ்லாத்திற்கு வந்தவர்கள் மிகக்குறைவானவர்களே.
பெரும்பாலோனர் மேல் ஜாதிக்காரர்களின் கொடுமைகளில் இருந்தும் தீண்டாமை என்ற அரக்கணிடம் இருந்தும் விடுதலை வேண்டி இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள். அதனால்தான் இந்திய முஸ்லிம்கள் பலரிடம் மூடநம்பிக்கைகளும் மூடபழக்கங்கழும் நிரம்பிக்கிடக்கின்றது. இறைவனின் பார்வையில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால் மட்டுமே ஒருவன் இஸ்லாமியனாக ஆகிவிடமுடியாது, இஸ்லாமிய தாய் தந்தைக்கு பிறந்ததாலும், இஸ்லாமிய பெயரை சூட்டிக்கொண்டாதாலோ இஸ்லாமியனாக ஆகிவிடமுடியாது, வணக்கத்திற்கு உரியவன் இறைவன் ஒருவனே அவனுடய இறுதி தூதர் முஹம்மது நபி என்று நம்பிக்கை கொண்டு இஸ்லாத்தின் கடமைகளை ஒழுங்காக நிரைவேற்றி இறை அச்சத்தோடு வாழ்பவர்கலேயே இறைவன் இஸ்லாமியனாக ஏற்றுக்கொள்கிறான்.

இஸ்லாமிய சகோதரர் களுக்கு ஓர் வேண்டுகோள் இஸ்லாத்தின் மீது விமர்சனம் செய்பவர்களுக்கு ஆதரப்பூர்வமன ஹதீஸ்களை கொண்டு தெளிவு படுத்துங்கள். அடுத்தவர்களின் தவறைச்சொல்லி நம் தவறை நியாயப்படுத்தாதீர்கள். இஸ்லாம் தவறுகளுக்கு அப்பாற்பட்ட மார்க்கம் அதனால்தான் விவாதத்திற்கு அழைக்கிறது, மனிதர்களை சிந்திக்கச்சொல்கிறது. எடுத்து வைப்பது நம்கடமை ஏற்றுக்கொள்வது அவரவர் உரிமை. எல்லாப்புகழும் இறைவனுக்கே.


This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]