Thursday, October 13, 2005

 
இஸ்லாமிய எழுச்சியும் ஊடகங்களும்

இன்றய நிலையில் உலகில் ஊடகங்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது இந்த ஊடகங்களால் இஸ்லாத்திற்கு ஏற்பட்ட சாதக பாதகங்கள் என்ன,அல்லது ஊடகங்களால் இஸ்லாம் பின்தங்கி உள்ளதா எழுச்சி அடைந்துள்ளதா என்றால் எழுச்சி அடைந்தாகவே நான் கருதுகிறேன்.இந்த ஊடகங்களின் மூலம் இஸ்லாமியர்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படச்செய்த இறைவனுக்கே புகழ் அனைத்தும்.(அல்ஹம்துலில்லாஹ்).

கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்புவரை தமிழகத்தில் இஸ்லாமியர்களே இஸ்லாத்தையும் இஸ்லாமிய அடிப்படை சட்டங்களையும் இஸ்லாம் கூறுகின்ற வணக்கங்களையும் வாழ்க்கை முறையையும் தெரியாதவர்களாகவும் எதோ என் பெற்றோர் இஸ்லாம் அதனால் அவர்களுக்கு பிறந்த நானும் இஸ்லாமியன் என்ற எண்ணத்தில் தான் பெரும்பாலோர் இருந்தார்கள். இன்றைக்கு அவர்களில் பலர் உண்மையான இஸ்லாமிய வணக்கங்களை தெரிந்து கொள்ளவும் இஸ்லாமியச் சட்டங்களை அறிந்து கொள்ளவும் உதவியது இந்த ஊடகங்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை. இன்றைக்கு இஸ்லாம் கூறிய கடமைகளை செய்யக் கூடியவர்களாக பெரும்பாலன இஸ்லாமியர்கள் மாறி உள்ளதற்கும் இந்த ஊடகங்கள்தான் காரணம். அறியாமையினால் இஸ்லாமியர்களிடத்தில் இருந்த மூடநம்பிக்கைகள் நீக்கப்படவும் இந்த ஊடகங்கள் பயன் பட்டிருக்கிறது.பெண்கள் ஆடைகளில் நாகரீகம் பெருகிவிட்ட இந்தக்காலத்திலும் இஸ்லாமிய பெண்கள் அதிகமானோர் ஹிஜாப் அனிவதற்கும் இந்த ஊடகங்கள் பயன் பட்டிருக்கிறது
அதுமட்டுமின்றி மாற்றுமத சகோதரர்களும் இஸ்லாத்தை பற்றி அறிகின்ற வாய்ப்பை இந்த ஊடகங்களின் மூலம் செய்யமுடிந்துள்ளது. இஸ்லாமியர்கள் அறியாமையினால் தவறு செய்கின்றபோது அந்த தவறை சுட்டிக்காட்டுகின்ற அளவிற்கு பல மாற்று மத சகோதர்கள் இஸ்லாத்தை தெரிந்துள்ளார்கள் என்றால் அதற்கு இந்த ஊடகங்கள்தான் காரணம்.மாற்றுமத நண்பர்கள் நம்மை தப்பாக பேசிவிடுவார்களே என்பதினால் தொழுகின்ற நோன்பு நோற்கின்ற முஸ்லீம்களும் உள்ளார்கள் என்பதும் உண்மை.

வெறும் சொற்பொழிவு மட்டும் செய்துவிட்டு போகமல் இஸ்லாமியர்களையும் மாற்றுமத சகோதரர்களையும் கேள்வி கேட்கவைத்து அவர்களின் சந்தேகங்களை தீர்த்துவைப்பதற்கும் அதை உலகத்தில் உள்ள பெரும்பாலனவர்கள் தெரிந்து கொள்வதற்கும் இந்த ஊடகங்கள் பயன்பட்டிருக்கிற்து.

தொழுகையை பேனாதவர்களும் நோன்பை நோற்காதவர்களும்,ஸக்காத் என்ற வரியைச் செலுத்தாதவர்களும் பித்ரா என்றதர்மத்தை செய்யாதவர்களும் இருந்த நிலை மாறி இவற்றை பேனுதலுடன் செய்பவர்கள் அதிகமாகி உள்ளனர்.

ஃபித்ரா என்றால் என்ன என்று தெரியாதவர்கள் அதிகம் அதிகமான எண்ணிக்கையில் இஸ்லாமியர்கள் இருந்தார்கள் இன்று அந்தநிலை மாறியுள்ளது.
எல்லாமக்களும் அறியாமையில் இருந்தும் மூடப்பழக்கங்களில் இருந்தும் விடுபட்டு உண்மையான முஸ்லீமாகவும் இறை அச்சமுடயோர் களாகவும் இறைவனை மட்டுமே வணங்குபவர்களாகவும் நற்செயல் செய்பவர்களாகவும், நம்மையும் நம் சந்ததிகளையும் நேர்வழி நடக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் பாலிப்பானாக.

அஸ்ஸலாமு அலைக்கும்.


சகோதரர்களே நோன்புப்பெருநாள் எனும் ஈகைத்திருநாள் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது அந்த ஈகைத் திருநாளை எல்லா இஸ்லாமியர்களும் கொண்டாடும் விதமாக ஃபித்ரா என்ற தர்மத்தை செய்திடுவோம்.

பசி தாகத்துடன் இருந்து நோன்பு நோற்ற நாம் அதனை முழுமையாக்கி பெருநாள் கொண்டாடும் போது அதனை தர்மத்தை கொண்டு ஆரம்பிக்க வேண்டும்.அன்று எவரும் பசியுடன் இருக்கக்கூடது அன்று நோன்புவைப்பதும் தடுக்கப்பட்டது என்று அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் கூறினார்கள்.

அடிமைகள், அடிமைகள் அல்லாதவர்கள், ஆண்கள், பெண்கள், சிறுவர்,பெரியோர் ஆகிய அனைத்து முஸ்லீம்கள் மீதும் நோன்புப் பெருநாள் தர்மத்தை நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் கடமையாக்கினார்கள்.
அறிவிப்பவர்:இப்னு உமர்(ரலி)நூல்: புகாரி,முஸ்லீம்

எவர் பெருநாள் தொழுகைக்கு முன்பே இந்த தர்மத்தை கொடுக்கின்றாரோ அதுதான் ஸக்காத்துல் ஃபித்ர்ஆகும்.எவர் தொழுகைக்குப் பிறகு கொடுக்கின்றாரோ அது தர்மங்களில் ஒன்றாகவே கருதப்படும்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி)நூல்:அபுதாவுத்

ஃபித்ரா தேடிச் சென்று கொடுப்பதே சிறந்தது.
அந்த ஏழைகள் இன்று (அதாவது பெருநாள் தினத்தில்)வீடுவீடாக சுற்றிவருவதை தேவையற்றதாக்குங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்:இப்னு உமர்(ரலி)நூல்:பைஹகீ.


Wednesday, October 05, 2005

 
அஸ்ஸலாமு அலைக்கும்
நான் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் காலத்தில் சவுதி அரேபியாவில் வேலை பார்க்கும் எங்கள் ஊரை சேர்ந்த ஒருவர் விடுப்பில் வந்து இருந்தார். அவர் யாரைப் பார்த்தாலும் அஸ்ஸலாமு அலைக்கும் என்பார் நான் அப்ப நினைப்பேன் இவர் என்ன யாரைப் பார்த்தாலும் அஸ்ஸலாமு அலைக்கும்
என்று சொல்லிட்டு இருக்காரு என்று.
சிலவருடங்களுக்கு பிறகு அதாவது 1992 அல்லது1993 என்று நினைகின்றேன் சென்னை வந்து இருந்தேன் அப்பொழுது அடையாறு பஸ் டெப்போவுக்கு அருகில் உள்ள மசூதியில் அப்துல்லாஹ் அடியார் (நிரோட்டம் அடியர்) அவர்களின் பயான் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது.

அவர் பயானின் ஆரம்பமாக கூடி இருந்தவர்களை பார்த்து அஸ்ஸலாமு அலைக்கும்(உங்கள்மீதும இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டவதாக) என்று சொன்னார், அலைக்கும் சலாம்(உங்கள்மீதும் இறைவனின் சாந்தி உண்டவதாக) என்று சிலர் வாய்க்குள்ளே பதில் சொன்னார்கள் சிலர் சொல்லவில்லை. அவர் சற்று கோபபட்டவராக சலாம் சொன்னால் பதில் சொல்ல அல்லது சத்தமாக சொல்ல உங்களுக்கு என்ன தயக்கம் என்று கூறியதோடு அவரின் பயான் சலாத்தின் விரிவுரையாக அமைந்தது அஸ்ஸலாமு அலைக்கும்
(உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக)இதை எந்த சந்தர்ப்பத்திலும் எந்த இடத்திலும் யாரிடமும் சொல்லலாம். ஒருவர் காலை நேரத்தில் தன்னுடய பணத்தை பிட்பாக்கெட் கொடுத்து விட்டு நிற்கிறார் அவரிடம் (Good morning) நல்ல காலைப்பொழுது என்று சொல்வதைவிட அஸ்ஸலாமு அலைக்கும் (உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக) என்று சொல்வது சிறந்ததாக இருக்கும், இறந்த வீட்டுக்கு போகின்றோம் இறந்தவரின் உறவினர்களிடம் (Good morning) நல்ல காலைப் பொழுது அல்லது (Good evening) நல்ல மாலைப் பொழுது என்று சொல்வதைவிட அஸ்ஸலாமு அலைக்கும் (உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக) என்று சொல்வது சிறந்ததாக இருக்கும், இப்படி எந்த சூல்நிலையிலும் சலாம் சொல்வது சிறந்ததாக இருக்கும்.முகமன் கூறுவதற்கு இதைவிட நல்ல வார்த்தை இருப்பதாக எனக்குத் தெரியவில்லை எனவே சலாம் சொல்லுவதை மகிழ்வோடு சொல்லுங்கள் என்றுகூரினார்.


ஈமான் கொண்டவர்களே! உங்கள் வீடுகளல்லாத (வேறு) வீடுகளில், அ(வ்வீட்டிலுள்ள)வர்களிடம்
அனுமதி பெற்று, அவர்களுக்கு ஸலாம் சொல்லாதவரை (அவற்றினுள்) பிரவேசிக்காதீர்கள் - (அவ்வாறு
நடப்பதுவே) உங்களுக்கு நன்மையாகும்; நீங்கள் நற்போதனை பெறுவதற்கு (இது உங்களுக்குக்
கூறப்படுகிறது). (24:27)

நீங்கள் ஈமான் கொள்ளாதவரை சுவர்க்கத்தில் நுழைய முடியாது. நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்கும் வரை ஈமான் கொள்ள முடியாது. நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்கத்துணை செய்யும் காரியத்தை நான் கூறட்டுமா? உங்களுக்கிடையே ஸலாம் கூறுவதைப் பரவலாக்குங்கள். அபுஹுரைரா(ரலி) - நூல்: முஸ்லீம்வாகனத்தில்செல்பவர் நடப்பவருக்கும், நடப்பவர் அமர்ந்திருப்பவருக்கும் குறைந்த எண்ணிக்கையில் உள்ளவர்கள், அதிக எண்ணிக்கையிலுள்ளவர்களுக்கும் ஸலாம் கூறவேண்டும். அபுஹுரைரா(ரலி) - நூல்: முஸ்லீம்ஒருவர் ஒருவீட்டில் நுழையும் முன் 'அஸ்ஸலாமு அலைக்கும்' என அனுமதி கோரட்டும்.அருமை மகனே! நீ உனது குடும்பத்தினரிடம் சென்றால் ஸலாம் கூறு? அது உனக்கும் உன் குடும்பத்தாருக்கும் பரக்கத்தாக அமையும். (அனஸ்(ரலி) - நூல்: திர்மிதீ)

யார் முதலில் ஸலாம் கூறுகிறாரோ அவரே அல்லாஹ்வுக்கு மிகவும் நெருக்கமானவராவார். (அபூஉமாமா(ரலி) - நூல்: அபூதாவுத்)நபி(ஸல்) அவர்கள் சிறுவர்களைக் கடந்து சென்றால் அவர்களுக்கும் ஸலாம் கூறுவார்கள். (அனஸ்(ரலி) - நூல்: புகாரி)உங்களில் ஒருவர் சபைக்குச் சென்றால் ஸலாம் கூறட்டும். அங்கிருந்து எழ நாடும் போது ஸலாம் கூறட்டும். (அபூஹுரைரா(ரலி) - நூல்: அபூதாவுத்)இஸ்லாத்தில் சிறந்த அறம் எதுவென ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்ட போது (பசித்தோருக்கு) உணவளிப்பதும், தெரிந்தவர்களுக்கும், தெரியாதவர்களுக்கும் ஸலாம் கூறுவதாகும் என விடையளித்தார்கள். (அப்துல்லாஹ்பின் ஆஸ்(ரலி) - நூற்கள்: புகாரி, முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்கள் சபையில் நுழைந்த...முதல் மனிதர் : அஸ்ஸலாமுஅலைக்கும் எனக்கூறினார்.நபி(ஸல்) : பத்து நன்மைகள்! – என்றார்கள்.
இரண்டாமவர் : அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்மதுல்லாஹ் எனக்கூறினார். நபி(ஸல்) : இருபது நன்மைகள்! – என்றார்கள்.
மூன்றாமவர் : அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ!எனக்கூறினார்.நபி(ஸல்) : முப்பது நன்மைகள்!-எனப்பகர்ந்தார்கள். (அபூ தாவூத், திர்மிதி)

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]