Monday, July 04, 2005

 


இது ஹதீஸ் இல்லிங்கோ என் கருத்துங்கோ

வாழ்த்துக்கள்

நான் தமிழ்மணத்திற்கு புதியவன்.அதிரைநன்பரின் மூலமாக அதிரைக்கரான் எழுத்துக்களை வாசிப்பதற்காக வந்தவன். அத்துடன் இஸ்லாம் பற்றிய விவாதங்கலையும் வாசிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அது விசயமாக மனதில்பட்ட சிலவற்றை பதிவுசெய்ய விரும்புகிறேன். வாய்ப்பு தந்த தமிழ்மணத்திற்கு வாழ்த்துக்கள். சகோதரர் நேசக்குமார் அவர்கள் கஃபாவில் ஏன் முஸ்லீம்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர் என்ற கேள்வியை எழுப்பி இருந்தார். சகோதரர் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் கஃபா என்பது இறைவனை வணங்குவதற்கான ஆலயம், சுற்றுலா தலமல்ல. இறைவனையும் இறைவனுடைய தூதர் முகமது நபியவர்களையும் ஏற்று கொண்டவர் களுக்கு எந்த தடையுமில்லை. இஸ்லாமிய கொள்கைப்படி உலகில் உள்ள அணைத்து மனிதர்களும் ஆதமுடைய மக்களே இறைவன் சன்னதியில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் கருப்பன் வெள்ளையன் என்றவித்தியசம் கிடையது, மேல்நாட்டுக்கரன் கீழ்நட்டுகாரன் என்ற வேருபாடும் கிடையது. நாடு என்பதுகூட் மனிதர்கள் போட்டுக்கொண்ட கோடுதான். எப்படி இந்தியா என்ற ஒருநாடு இந்தியா, பாக்கிஸ்தான், பங்காளதேசம் என்று கோடு போட்டுக்கொண்டர்களோ அதுபோல். எல்லோரும் ஆதமுடை மக்கள்தானே ஏன் எல்லோரையும் கஃபாவுக்கு செல்ல அனும்திப்பதில்லை என்ற கேள்வி எழலாம் மனிதனை படைத்ததின் நோக்கம் படைத்த இறைவனை வணங்குவதற்காக அவனைமட்டும் வனங்குவதற்காக மாறாக மனிதன் படைத்தவனை வணங்குவதற்கு பதிலாக இறைவனால் படைத்தவற்றை வணங்க ஆரம்பித்தான். அவர்களை நேர்வழி படுத்துவதற்காகத்தான் பல இறைத்தூதர்களை அனுப்பியதாக திருமறை குர்ஆனில் இறைவன் கூறுகிறான். குர்ஆனில் சொல்லப்பட்ட வசனங்கள் அனைத்தும் எல்லாக்காலத்தும் பொருந்தகூடியதாகவும், பலதரப்பட்ட எண்ணங்களை உடைய மனிதர்களை கருத்தில் கொண்டே ஒவ்வொரு வசனமும் அருளப்பட்டுள்ளது. படைத்த இறைவன் எல்லாம் அறிந்தவன். கஃபா என்ற ஆலயம் உலகில் இறைவனை வணங்குவதற்காக கட்டப்பட்ட முதல் வணக்கஸ்தலம். இதை ஏற்றுக்கொண்ட முஸ்லிம்கள் கஃபாவிற்கு சென்று இறைவனை வணங்குவதை புனிதமாக கருதுகிறார்கள். இப்பொழுது எல்லா மதத்தினரையும் கஃபாவிற்கு செல்ல அனுமதித்தால் சகோதரர் நேசக்குமார் போன்ற நல்லவர்களாக எல்லோரும் இருக்கமாட்டர்கள். உலக பயங்கரவாதி நரேந்திரமோடி, தொகாடியா போன்றவர்கள் சென்று ஏதும் குழப்பங்கலை ஏற்படுத்திவிடக்கூடாது என்றும், அசோக் சிங்கால், ராமகோபலன் போன்ற்வர்கள் சாணத்தை கொண்டுவைத்துவிட்டு இங்குதான் பிள்ளையார் பிறந்தார் என்றும் கூறிவிடக்கூடாதே என்றும் எண்ணித்தான் இஸ்லாம் அல்லாதவர்கள் கஃபாவிற்கு செல்ல இறைவன் அனுமதி மறுத்திருக்கிறான். இப்பொழுதும் கூட வேலைக்காக சவுதி அரேபியா செல்லும் மாற்றுமத சகோதரர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு கஃபாவிற்கு சென்றுவருகிரார்கள் இஸ்லாமிய பெயரில் பாஸ்போட் எடுத்து சவுதி வரும்மாற்றுமத சகோதரர்களும் கஃபாவிற்கு சென்றுவருகிரார்கள் அவர்களின் உள்ளங்களை அல்லாஹ் அறிந்தவனாக இருக்கிறான். கஃபாவிற்கு கார்டியனக ஒரு இந்தியரோ, அல்லது ஒருகருப்பரோ இருக்கமுடியுமா என்றகேள்வியையும் சகோதரர் எழுப்பியுள்ளர். கஃபா ஆலயம் சவுதி அரேபியாவில் உள்ளது கஃபாவை பராமரிப்பது, அங்குவரும் எல்லாப்பகுதி இஸ்லாமியர்களுக்கும் தேவையான வசதிகளை செய்து கொடுப்பது அங்குள்ள அரசாங்கத்தின் கடமை. அங்கு நடப்பது மன்னர் ஆட்சி ஆகவே கஃபாவின் பராமரிப்பு பொருப்பை மன்னர் ஏற்றுக்கொண்டுள்ளார். பின்பொரு காலத்தில் அங்கு மக்கள் ஆட்சி ஏற்பட்டால் மக்கள் ஆட்சிக்கு யார் தலைமை வகிக்கின்றாரோ அவர் அந்த பொருப்பை வகிப்பார். சவுதி அரேபியாவின் மன்னர் பொருப்பில் இந்தியர் இருக்கமுடியுமா என்று கேட்பதை நம் அறிவு ஏற்றுக்கொள்ளவில்லையோ அதுப்போன்றுதான் இந்த வாதமும்.

மன்னர் கார்டியனக இருப்பதால் அவருக்கென்று விசேச தொழுகையோ விசேச பிரர்த்தணையோ நடப்பது கிடையது,எல்லா இஸ்லாமியர்கழும் தொழுகின்ற நேரத்தில்தான் அவரும் தொழவேண்டும் அவருக்கு முன்னல் நிற்பவரின் கால் அருகில்தான் தலைவைத்து சஜ்தாசெய்யவேண்டும்.

இஸ்லாமிய மார்க்கத்தை இஸ்லாமியர்களின் செயல்களை வைத்து மதிப்பீடு செய்யகூடாது முக்கியமாக இந்தியாவில் உள்ள முஸ்லீம்களை வைத்து. காரணம் இந்தியாவில் உள்ள முஸ்லீம்கள் இஸ்லாத்தினால் ஈர்க்கப்பட்டவர்கள் என்பதை விட இஸ்லாத்தின் மீது தள்ளப்பட்டவர்கள் அல்லது இஸ்லாத்தின் மீது தினிக்கப்பட்டவர்கள் என்றால் அது மிகைஆகாது. இஸ்லாத்தை அறிந்து இஸ்லாமிய சட்டதிட்டங்களை அறிந்து குர்ஆனை படித்து அதன் நன்மைகளை தெரிந்து இஸ்லாத்திற்கு வந்தவர்கள் மிகக்குறைவானவர்களே.
பெரும்பாலோனர் மேல் ஜாதிக்காரர்களின் கொடுமைகளில் இருந்தும் தீண்டாமை என்ற அரக்கணிடம் இருந்தும் விடுதலை வேண்டி இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள். அதனால்தான் இந்திய முஸ்லிம்கள் பலரிடம் மூடநம்பிக்கைகளும் மூடபழக்கங்கழும் நிரம்பிக்கிடக்கின்றது. இறைவனின் பார்வையில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால் மட்டுமே ஒருவன் இஸ்லாமியனாக ஆகிவிடமுடியாது, இஸ்லாமிய தாய் தந்தைக்கு பிறந்ததாலும், இஸ்லாமிய பெயரை சூட்டிக்கொண்டாதாலோ இஸ்லாமியனாக ஆகிவிடமுடியாது, வணக்கத்திற்கு உரியவன் இறைவன் ஒருவனே அவனுடய இறுதி தூதர் முஹம்மது நபி என்று நம்பிக்கை கொண்டு இஸ்லாத்தின் கடமைகளை ஒழுங்காக நிரைவேற்றி இறை அச்சத்தோடு வாழ்பவர்கலேயே இறைவன் இஸ்லாமியனாக ஏற்றுக்கொள்கிறான்.

இஸ்லாமிய சகோதரர் களுக்கு ஓர் வேண்டுகோள் இஸ்லாத்தின் மீது விமர்சனம் செய்பவர்களுக்கு ஆதரப்பூர்வமன ஹதீஸ்களை கொண்டு தெளிவு படுத்துங்கள். அடுத்தவர்களின் தவறைச்சொல்லி நம் தவறை நியாயப்படுத்தாதீர்கள். இஸ்லாம் தவறுகளுக்கு அப்பாற்பட்ட மார்க்கம் அதனால்தான் விவாதத்திற்கு அழைக்கிறது, மனிதர்களை சிந்திக்கச்சொல்கிறது. எடுத்து வைப்பது நம்கடமை ஏற்றுக்கொள்வது அவரவர் உரிமை. எல்லாப்புகழும் இறைவனுக்கே.


Comments:
முதலில் வணக்கம் கூறி வரவேற்கிறேன்.

//மனிதனை படைத்ததின் நோக்கம் படைத்த இறைவனை வணங்குவதற்காக அவனைமட்டும் வனங்குவதற்காக //

இதைச் சொல்வதை மதங்கள் எப்போதுதான் நிறுத்தப்போகின்றனவோ தெரியவில்லை. உண்மை அதுதானென்றால் (முதலில் இறைவனின் படைப்புக்கொள்கை உண்மையாயிருக்க வேண்டும்.) கடவுளை விடவும் கொடுமையான சாடிஸ்ட்டையோ அயோக்கியனையோ அடையாளங்காட்ட முடியாது. தன்னைத் துதிப்பதற்காகவே மனித இனத்தைப் படைத்தானென்றால், காசு குடுத்து தனக்குக் கோசம் போடச்சொல்லும் அரசியல் வாதியைவிடவும் ஆயிரம் மடங்குக் கீழ்த்தரமான ஒரு ஜந்து தான் கடவுள் என்பதாகிவிடும்.

தன்னை மட்டுமே வணங்கச் சொல்லிக் கட்டளையிடும், மறுக்கும் பட்சத்தில் கொடுமையாகத் தண்டிக்கவும் செய்யும் கடவுள் எப்படிக் கருணையுள்ளவனாகவும் அன்பே வடிவானவனாகவும் காட்டப்படுகிறானென்பது புரியவில்லை. எல்லாவற்றையும் நம்பிக்கொண்டிருப்பவர்களைக் குறித்து எந்தக் கருத்துமில்லை. இதே சித்தாந்தங்களைச் சொல்லும் மற்ற மதங்களின் கடவுள்களுக்குக் கூட (கடவுள் என்ற கருத்தியலுக்கு) இவை பொருந்தும். கிறிஸ்தவம்கூட இதே கோமாளிக் கருத்துக்களையே வைக்கிறது.
முடிந்தால் இதைவிட்டுவிட்டு மனிதப் படைப்புக்குப் புதிதாக ஏதாவது காரணம் உருவாக்குங்கள்.

(உண்மையில் வாதிப்பதற்குக்கூட முக்கியத்துவம் அளிக்கக்கூடாத ஒரு வஸ்துதான் கடவுள் என்பது தெரிந்திருந்தாலும், அதை வைத்து நடத்தப்படும் வியாபாரமும், சண்டைகளும் முட்டாள்தனமான விளக்கங்களும் சகிக்க முடியவில்லை.)
 
//கடவுளை விடவும் கொடுமையான சாடிஸ்ட்டையோ அயோக்கியனையோ அடையாளங்காட்ட முடியாது.//
பாதிக்கப்பட்டவனுக்கு கருணையுள்ளவனாகவும் பாதிப்பு ஏற்படுத்தியவனை தண்டிக்க கூடியவனாகவும் இறைவன் விளங்குறான்
இறை நம்பிக்கையாளன் மரணத்திற்கு பின் ஒரு வாழ்க்கை உண்டு நாம் நன்மை செய்தால் சுவர்க்கமும் தீமை செய்தால்
தண்டனையும் இறைவன் கொடுப்பன் என்று நம்புகிறான்.

இறை அச்சத்துடன் (இறை அச்சத்துடன் கவணத்தில் கொள்க) கடவுளை நம்புகிறவன் கடவுளை வணங்குகிறான் அப்படி வணங்குபவன் இறைவன்மீது அச்சமும் பயமும் கொள்கிறான் அவ்வாறு இறைவன்மீது அச்சம் கொள்பவன் நண்மை ஏதும் செய் கிரானோ இல்லையோ தீமைசெய்ய அஞ்சுகிறான் (நண்மை செய்ய நிறையபேர் இருக்கிறார்கள் தீமையை தடுக்கத்தான் யாருமில்லை)
தவறு செய்ய வாய்ப்பு ஏற்படும் பொழுதெல்லாம் இது தவறு நம்முடையசெயல்களை இறைவன் பார்த்துக்கொண்டிருக்கிறான் அவன் நம்மை தண்டிப்பான் என்ற அச்சத்தில் தவறு செய்யாது தன்னை காத்து கொள்கிறான். உதாரணமாக நான் பேருந்தில் பயனித்துக்கொண்டிருக்கிறேன் அருகில் இருக்கும் அன்பரிடம் மதிப்பு மிக்க பொருள் உள்ளது பயணக்களைப்பில் அவர் தூங்கிக்கொண்டிருக்கிறார் உடன் பயணம் செய்பவர்கள் யாரும் என்னை கவனிக்கவில்லை அப்பொழுது என்மனது அந்தப்பொருளை அபகரிக்க தூண்டுகிறது, இங்கு இருப்பவர்கள் யாரும் கவனிக்கவில்லை ஆனால் இறைவன் பார்த்துக்கொண்டிருக்கிறான் அவன் தண்டிப்பான் என்ற அச்சம் வரும் பொழுது அந்த தவறிலிருந்து என்னை பாது காத்துகொள்வதோடு மட்டுமின்றி அதன் பாதிப்பில் இருந்து அருகில் இருப்பவரும் காப்பாற்றப்படுகிறார்.
ஒரு பலமிக்கவனால் ஒரு எளியவன் பாதிக்கப்படும் பொழுது அவனை எதிர்த்து போராடமுடியவில்லை இறைவன் பர்த்துக்கொள்வான் என்று ஆறுதல் அடைகிறான், இறை நம்பிக்கை அவனுக்கு ஆறுதலாக இருக்கிறது.

இறைவன் இருக்கிறானா இல்லையா என்ற கருத்தை ஒதுக்கிவைத்து விட்டு இறைநம்பிக்கை பெரும்பாலான மனிதனை தவறு செய்வதிலிருந்து தடுக்கின்றது என்பதை கருத்தில் கொண்டால் நல்லது.
 
//"அடுத்தவர்களின் தவறைச்சொல்லி நம் தவறை நியாயப்படுத்தாதீர்கள்." //

நண்பரே... நல்ல நோக்கத்துடன், நல்ல கருத்துக்களைக் கூற முன்வந்திருக்கிறீர்கள்.

//"சாணத்தை கொண்டுவைத்துவிட்டு..."//

ஆனால் எக்காரணத்தை முன்னிட்டும் இஸ்லாமியர் அல்லாதோரின் மனம் புண்படாத வகையில் எழுதுவது உங்கள் நோக்கத்திற்கான பயனைத் தரலாம்.

அன்புடன் சர்தார்
 
திரு வசந்தனின் கடவுள் மறுப்புக்கொள்கையே என்னுடையதும்.
நீங்கள் சொல்லி நாங்களோ, நாங்கள் சொல்லி நீங்களோ மாறவா போகிறோம்.
ஒரு உண்மை கூறி உள்ளீர்கள் - நம் நாட்டு மதமாற்றம் பற்றி நீங்கள் கூறியுள்ளது கிறித்துவர்களுக்கும் பொருந்தும். சாதீயம் விரட்டியது; இஸ்லாம் பெரிதளவும், கிறித்துவம் ஓரளவேனும் (ஏனெனில் கிறித்துவம் சாதியை ஒழிக்க, ஒதுக்க முடியவில்லை; மிகவும் முன்கூட்டியே வந்ததால்)தாழ்த்தப்பட்டவர்களைத் தாங்கியது. ஆக, ஒன்றும் comparative study செய்து மாறியவர்களல்ல நம் தாத்தாக்கள். ஆகவே, நாமாவது நமது கண்ணை நாமே திறந்து கொள்வது நன்று. ஒரு மதத்தில் பிறந்த ஒரே காரணத்திற்க்காகவே பெரும்பாலானோர் ஏதாவது ஒரு மதத்தைக் கட்டிக்கொண்டு...
 
கடவுள் மறுப்பு என்பது சிந்தனை மறுப்பே. மனிதன் தன் சிந்தனைக்கு எட்டாதவற்றை மறுத்து ஒதுக்குவான். இது சிந்தனை குறைபாடேயன்றி, கடவுளின் குறைபாடல்ல.

கடவுள் மறுப்பவர்கள் மிகைக்கும் போது, கடவுளை நம்புபவர்கள் சிறுபான்மையினராகவும், கடவுள் மறுப்பாளர்கள் பெரும்பான்மையாகவும் ஆவார்கள். அதாவது கடவுள் மறுப்பு என்பதும் ஒரு மதமாகவே இருக்கும். எனினும், மனிதன் தன் இயல்பை மாற்றிக் கொண்டு, சக மனிதருடன் நேயத்துடன் இருப்பான் என எப்படி நம்புகிறார்கள்?
 
"மனிதன் தன் இயல்பை மாற்றிக் கொண்டு, சக மனிதருடன் நேயத்துடன் இருப்பான் என எப்படி நம்புகிறார்கள்"
கேள்வியில் குறைபாடு உள்ளது என்று நினைக்கின்றேன்.
நீங்கள் சொல்வதாக நான் நினைப்பது: கடவுளை நம்புவர்களிடம்தான் மனித நேயம் உண்டு.

ஆனால் நடப்பில், எந்த மதத்தினராயினும் 'ஆழ்ந்த நம்பிக்கைகொண்டோர்'-fundamentalist என்றுவைத்துக்கொள்ளுங்களேன்- தங்களுக்கும் கடவுளுக்கும் ஒரு தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு, அல்லது அந்த பாவனையில் இருந்துகொண்டு சக மனிதர்களிடம் எந்தவித நேயத்தோடும் இல்லாதிருத்தலே வழக்கமாக நாம் காண்பது.
 
For the first time I am coming across a muslim who is ready to discuss his religion without any blinded passion. I respect your views and really appreciate you for your very unpassioned calm way of stating your view point.

Now coming to the crux of what you say, one need not believe in anything because the same is being told to him by some authority.

There is a kind of aversion to muslim faith in india because of the cruelty inflicted by most of the rulers. The same applies to west's aversion to Islam. And you combine crusade with tyranny of chengiz khan and timur it gets worse. But a religion must be able to speak truth. where we hindus find it funny is when you say you have to believe in kuran bcoz prophet said it. Truth is like theory of relativity. Theory of relativity is good not because somebody said it or because millions believe in it but because it is true.
Unless you are able to reconcile your religion with science Islam will always be considered as religion of bombers. Most of the people are not even aware that algebra and other astronomical inventions came from middle east. But over period of time the greed of rulers and their cruelty has made islam a religion looked with dread.
Though I am a tamilian i confess i am more comfortable writing/speaking in english and therefore this letter.
My mail id is yaamunan@gmail.com
 
மருதூரான்,
உங்கள் வரவு நல்வரவாவுக.
//அடுத்தவர்களின் தவறைச்சொல்லி நம் தவறை நியாயப்படுத்தாதீர்கள்//
தன்னுடைய மதத்திலும் தவறு இருக்கலாம் என்று ஒப்புக்கொண்ட திறந்த மனம் படைத்த இஸ்லாமிய சகோதரனைப் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி.
// கஃபா என்ற ஆலயம் உலகில் இறைவனை வணங்குவதற்காக கட்டப்பட்ட முதல் வணக்கஸ்தலம்.//

கஃபா பற்றி மேலும் விளக்கமான தகவல்களை பெற ஏதாவது சுட்டி இருந்தால் கொடுங்களேன்.

//காரணம் இந்தியாவில் உள்ள முஸ்லீம்கள் இஸ்லாத்தினால் ஈர்க்கப்பட்டவர்கள் என்பதை விட இஸ்லாத்தின் மீது தள்ளப்பட்டவர்கள் அல்லது இஸ்லாத்தின் மீது தினிக்கப்பட்டவர்கள் என்றால் அது மிகைஆகாது. இஸ்லாத்தை அறிந்து இஸ்லாமிய சட்டதிட்டங்களை அறிந்து குர்ஆனை படித்து அதன் நன்மைகளை தெரிந்து இஸ்லாத்திற்கு வந்தவர்கள் மிகக்குறைவானவர்களே.//

இது எப்படி இந்தியாவுக்கு மட்டும் பொருந்தும் .இஸ்லாம்,கிறிஸ்தவம் எல்லாம் கூட்டமாக ,இனமாக ,நாடாக மதம் மாறியதால் வளர்ந்த மதங்களே..இஸ்லாத்தை அறிந்து இஸ்லாமிய சட்டதிட்டங்களை அறிந்து குர்ஆனை படித்து அதன் நன்மைகளை தெரிந்து இஸ்லாத்திற்கு வந்தவர்கள் உலகம் முழுவதும் பார்த்தாலும் ஒரு லட்சம் தேறாது . 98% முஸ்லிம் குடும்பத்தில் பிறந்ததால் முஸ்லிமாகவும் ,கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்ததால் கிறிஸ்தவர்களாகவும் இருப்பவர்கள் தான்.
 
பொடா பெரம்போகு ஈனோமீனொ
 
inomino vukku AIDS
 
Why is everyone involved in a character assasination of the said 'anti-muslim' posters ?

I would like to request certain muslim posters that worldwide , relevant agencies are keeping a close watch on activities of e-
jihadies.

DO NOT appear as a blip on their map.
 
சமுத்ரா எப்படா அனானிமசா மாறினே?

ஓம்பேரை ச.மூத்திரம் னு ஒரு ஈஜிஹாதி எழுதியிருக்கான் கவனிலே.
 
//ஒரு மதத்தில் பிறந்த ஒரே காரணத்திற்க்காகவே பெரும்பாலானோர் ஏதாவது ஒரு மதத்தைக் கட்டிக்கொண்டு..//.


சிறுவதில் நான் புகைபிடிக்காமல் இருந்தது அதன் தீமையை தெரிந்து அல்ல,என் தந்தை அடிப்பார்கள் என்று பயந்துதான் சிறுவதில் நான் புகை பிடிக்காமல் இருந்தேன்,இன்று அதன் பலனை நான் அனுபவிக்கின்றேன், ஆசிரியருக்கு பயந்துதான் நான் படித்தேன் இன்று நான் அதன் பலனை அனுபவிக்கின்றேன்.
அது போல் இறைவனுக்கு பயந்து தான் நான் நன்மை செய்கிறேனோ இல்லையோ தீமைசெய்யாமல் இருக்கிறேன் அதனால் மறுமையில் நன்மை கிடைக்கும் என நம்புகிறேன் மூடநம்பிக்கை என்று கூட சொல்லலாம் என்னுடய இறைநம்பிக்கையால் (மூட நம்பிக்கையினால்) யாருக்கும் எந்த தீமையும் ஏற்படுவதில்லை, இறைநம்பிக்கையால் மூடத்தனமான செயல்களை செய்ய இஸ்லாம் சொல்லவில்லை அவ்வாறு யாறாவது செய்வார்களயின் அது அவர்களின் குற்றமே தவிர இஸ்லாத்தின் குற்றமில்லை.
//தன்னுடைய மதத்திலும் தவறு இருக்கலாம் என்று ஒப்புக்கொண்ட திறந்த மனம் படைத்த இஸ்லாமிய சகோதரனைப் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி.//

இஸ்லாமியர்கள் தவறு செய்கிறார்கள் என்று மற்றவர்கள் சொல்லும்பொழுது நீங்கள் என்ன சரியா என்று கேட்பதை தவிர்க்கும் நோக்கத்தில் தான் இப்படி எழுதி இருந்தேன்.


// இஸ்லாத்தின் மீது விமர்சனம் செய்பவர்களுக்கு ஆதரப்பூர்வமன ஹதீஸ்களை கொண்டு தெளிவு படுத்துங்கள். அடுத்தவர்களின் தவறைச்சொல்லி நம் தவறை நியாயப்படுத்தாதீர்கள். இஸ்லாம் தவறுகளுக்கு அப்பாற்பட்ட மார்க்கம் அதனால்தான் விவாதத்திற்கு அழைக்கிறது//

“நம்” என்பது இஸ்லாமியர்களின் செயலைக் கூறுகிறேன்.
இஸ்லாத்தின் கோட்பாடுகளில் தவறு இல்லை என்பதை கூறிக்கொள்ள விறும்புகிறேன்.

இஸ்லாம் தவறுகளுக்கு அப்பாற்பட்ட மார்க்கம்.

இந்த வாக்கியத்தை நீங்கள் கவனிக்கவில்லை என்றால் என்னுடய குற்றமில்லை

"நன்மையை ஏவி தீமையைத் தடுங்கள்".
இஸ்லாம் வலியுறுத்திச் சொல்லும் இந்த ஒற்றை வார்த்தை
மனிதர்களுடய வாழ்க்கை பாதை சீர்செய்யக் கூடியாதாகவே நான் நம்புகிறேன்.

இஸ்லாத்தின் மீது குற்றம் சொல்பவர்கள் இதைவிட மற்றொரு மதத்தை சிறந்ததாக உள்ளதே என்று சொல்லவில்லை. அப்படி சொல்லாத நிலையில், சொல்லமுடியாத நிலையில் இஸ்லாத்தின் மீது குற்றம் சொல்வது ஏதோ உள்நோக்கம் இருப்பதாகவே நினைக்கச் செய்கிறது.
 
மருதூரான்
மற்றவர்களை குறை சொல்லாமல் சொல்ல வந்ததை அழகாக சொல்லியிருக்கிறீர் .வாழ்த்துக்கள்.

//இஸ்லாமிய மார்க்கத்தை இஸ்லாமியர்களின் செயல்களை வைத்து மதிப்பீடு செய்யகூடாது //

அது போலத்தான் கிருத்துவனுக்கும் ,ஹிந்துவுக்கும் யூதனுக்கும் என்று ஒத்து கொள்ளுவீர்கள் என நம்புகிறேன்.
 
//மருதூரான்
மற்றவர்களை குறை சொல்லாமல் சொல்ல வந்ததை அழகாக சொல்லியிருக்கிறீர்//
இஸ்லாம் எனக்கு கற்று தந்தது.
//அது போலத்தான் கிருத்துவனுக்கும் ,ஹிந்துவுக்கும் யூதனுக்கும் என்று ஒத்து கொள்ளுவீர்கள் என நம்புகிறேன்.//

உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்.""( 109:6 )
இது குர்ஆன் வசனம். இதை ஏற்காதவர் இஸ்லாமியர் இல்லை.

//நபி அவர்களின் முதல் மூடநம்பிக்கை எதிர்ப்பு வாதமே ,
தன்னைதானே காப்பாற்றிக்கொள்ளாத கடவுள் எப்படி மக்களை காப்பாற்ற போகிறார்//

(நபியே!) யானை(ப் படை)க் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?
அவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்கி விடவில்லையா?
மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான்.
சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன.
அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கி விட்டான்.(105:1-5)

இந்தவசனத்தில் கஃபாவை எதிரிகள் தாக்கவந்த போது எதிரிகளிடமிருந்து எப்படி இறைவன் கஃபாவை காப்பற்றினான் என்பதை விளக்கும் வசனம்.


//தன்னைத் துதிப்பதற்காகவே மனித இனத்தைப் படைத்தானென்றால், காசு குடுத்து தனக்குக் கோசம் போடச்சொல்லும் அரசியல் வாதியைவிடவும் ஆயிரம் மடங்குக் கீழ்த்தரமான ஒரு ஜந்து தான் கடவுள் என்பதாகிவிடும்.//

அரசியல்வாதிக்கு கோசம் போட்டால் கோசம்போடுபவனைவிட அரசியல்வாதியே அதிகம் நன்மை அடைகிறான்.

ஆனால் ஒரு இறை அச்சமுடையோனால் மற்றவர்களுக்கும் நன்மைகள் செய்ய தூண்டப்படுகிறான். மற்றவர்களுக்கு உதவி புரிவதும் இஸ்லாத்தின்பார்வையில் ஒரு வணக்கமே.

நியாயத் தீர்ப்பு நாளில் நடைபெறவுள்ள விசாரணையின் ஒரு காட்சியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு விளக்குகின்றனர்.
""மனிதனே! நான் நோயுற்றிருந்த போது நோய் விசாரிக்க ஏன் நீ வரவில்லை'' என்று நியாயத் தீர்ப்பு நாளில் இறைவன் கேட்பான். ""என் இறைவா! நீயோ அகிலங்களைப் படைத்துப் பராமரிப்பவன். உன்னை நான் எப்படி நோய் விசாரிக்க முடியும்?'' என்று மனிதன் பதிலளிப்பான். ""எனது அடியான் ஒருவன் நோயுற்றதை நீ அறிந்தும் அவனை நீ நோய் விசாரிக்கச் செல்லவில்லை. அவனை நீ நோய் விசாரிக்கச் சென்றிருந்தால் அவனிடத்தில் என்னைக் கண்டிருப்பாய்'' என்று இறைவன் கூறுவான். ""மனிதனே! என்னிடம் நான் உணவு கேட்டு வந்த போது எனக்கு உணவளிக்க மறுத்து விட்டாயே?'' என்று இறைவன் மீண்டும் கேட்பான். ""நீயோ அகிலத்தையும் படைத்துப் பராமரிப்பவனாக இருக்கிறாய். நான் உனக்கு எவ்வாறு உணவளிக்க இயலும்?'' என்று மனிதன் கூறுவான். ""என் அடியான் உன்னிடம் உணவு கேட்டு வந்த போது அவனுக்கு நீ உணவளிக்க மறுத்தது எனக்குத் தெரியாதா? அவனுக்கு நீ உணவளித்திருந்தால் அங்கே என்னைக் கண்டிருப்பாய்'' என்று இறைவன் கூறுவான். ""மனிதனே! உன்னிடம் நான் தண்ணீர் கேட்டு வந்த போது எனக்குத் தண்ணீர் தர மறுத்து விட்டாயே?'' என்று இறைவன் மீண்டும் கேட்பான். ""என் இறைவா! அகிலத்தின் அதிபதியான உனக்கு நான் எவ்வாறு தண்ணீர் தர இயலும்?'' என்று மனிதன் கூறுவான். ""எனது அடியான் ஒருவன் உன்னிடம் தண்ணீர் கேட்டு வந்த போது அவனுக்கு நீ தண்ணீர் புகட்டவில்லை. அவனுக்குத் தண்ணீர் புகட்டியிருந்தால் அங்கே என்னைக் கண்டிருப்பாய்'' என்று இறைவன் கூறுவான். இவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் 4661

""மனிதனுக்கு உதவுவதும் இறைவனுக்குச் செய்யும் வணக்கம்'' என்பதை இறைவனின் இந்த விசாரணை முறையிருந்து அறிந்து கொள்ளலாம்.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]