Wednesday, October 05, 2005

 
அஸ்ஸலாமு அலைக்கும்
நான் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் காலத்தில் சவுதி அரேபியாவில் வேலை பார்க்கும் எங்கள் ஊரை சேர்ந்த ஒருவர் விடுப்பில் வந்து இருந்தார். அவர் யாரைப் பார்த்தாலும் அஸ்ஸலாமு அலைக்கும் என்பார் நான் அப்ப நினைப்பேன் இவர் என்ன யாரைப் பார்த்தாலும் அஸ்ஸலாமு அலைக்கும்
என்று சொல்லிட்டு இருக்காரு என்று.
சிலவருடங்களுக்கு பிறகு அதாவது 1992 அல்லது1993 என்று நினைகின்றேன் சென்னை வந்து இருந்தேன் அப்பொழுது அடையாறு பஸ் டெப்போவுக்கு அருகில் உள்ள மசூதியில் அப்துல்லாஹ் அடியார் (நிரோட்டம் அடியர்) அவர்களின் பயான் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது.

அவர் பயானின் ஆரம்பமாக கூடி இருந்தவர்களை பார்த்து அஸ்ஸலாமு அலைக்கும்(உங்கள்மீதும இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டவதாக) என்று சொன்னார், அலைக்கும் சலாம்(உங்கள்மீதும் இறைவனின் சாந்தி உண்டவதாக) என்று சிலர் வாய்க்குள்ளே பதில் சொன்னார்கள் சிலர் சொல்லவில்லை. அவர் சற்று கோபபட்டவராக சலாம் சொன்னால் பதில் சொல்ல அல்லது சத்தமாக சொல்ல உங்களுக்கு என்ன தயக்கம் என்று கூறியதோடு அவரின் பயான் சலாத்தின் விரிவுரையாக அமைந்தது அஸ்ஸலாமு அலைக்கும்
(உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக)இதை எந்த சந்தர்ப்பத்திலும் எந்த இடத்திலும் யாரிடமும் சொல்லலாம். ஒருவர் காலை நேரத்தில் தன்னுடய பணத்தை பிட்பாக்கெட் கொடுத்து விட்டு நிற்கிறார் அவரிடம் (Good morning) நல்ல காலைப்பொழுது என்று சொல்வதைவிட அஸ்ஸலாமு அலைக்கும் (உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக) என்று சொல்வது சிறந்ததாக இருக்கும், இறந்த வீட்டுக்கு போகின்றோம் இறந்தவரின் உறவினர்களிடம் (Good morning) நல்ல காலைப் பொழுது அல்லது (Good evening) நல்ல மாலைப் பொழுது என்று சொல்வதைவிட அஸ்ஸலாமு அலைக்கும் (உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக) என்று சொல்வது சிறந்ததாக இருக்கும், இப்படி எந்த சூல்நிலையிலும் சலாம் சொல்வது சிறந்ததாக இருக்கும்.முகமன் கூறுவதற்கு இதைவிட நல்ல வார்த்தை இருப்பதாக எனக்குத் தெரியவில்லை எனவே சலாம் சொல்லுவதை மகிழ்வோடு சொல்லுங்கள் என்றுகூரினார்.


ஈமான் கொண்டவர்களே! உங்கள் வீடுகளல்லாத (வேறு) வீடுகளில், அ(வ்வீட்டிலுள்ள)வர்களிடம்
அனுமதி பெற்று, அவர்களுக்கு ஸலாம் சொல்லாதவரை (அவற்றினுள்) பிரவேசிக்காதீர்கள் - (அவ்வாறு
நடப்பதுவே) உங்களுக்கு நன்மையாகும்; நீங்கள் நற்போதனை பெறுவதற்கு (இது உங்களுக்குக்
கூறப்படுகிறது). (24:27)

நீங்கள் ஈமான் கொள்ளாதவரை சுவர்க்கத்தில் நுழைய முடியாது. நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்கும் வரை ஈமான் கொள்ள முடியாது. நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்கத்துணை செய்யும் காரியத்தை நான் கூறட்டுமா? உங்களுக்கிடையே ஸலாம் கூறுவதைப் பரவலாக்குங்கள். அபுஹுரைரா(ரலி) - நூல்: முஸ்லீம்வாகனத்தில்செல்பவர் நடப்பவருக்கும், நடப்பவர் அமர்ந்திருப்பவருக்கும் குறைந்த எண்ணிக்கையில் உள்ளவர்கள், அதிக எண்ணிக்கையிலுள்ளவர்களுக்கும் ஸலாம் கூறவேண்டும். அபுஹுரைரா(ரலி) - நூல்: முஸ்லீம்ஒருவர் ஒருவீட்டில் நுழையும் முன் 'அஸ்ஸலாமு அலைக்கும்' என அனுமதி கோரட்டும்.அருமை மகனே! நீ உனது குடும்பத்தினரிடம் சென்றால் ஸலாம் கூறு? அது உனக்கும் உன் குடும்பத்தாருக்கும் பரக்கத்தாக அமையும். (அனஸ்(ரலி) - நூல்: திர்மிதீ)

யார் முதலில் ஸலாம் கூறுகிறாரோ அவரே அல்லாஹ்வுக்கு மிகவும் நெருக்கமானவராவார். (அபூஉமாமா(ரலி) - நூல்: அபூதாவுத்)நபி(ஸல்) அவர்கள் சிறுவர்களைக் கடந்து சென்றால் அவர்களுக்கும் ஸலாம் கூறுவார்கள். (அனஸ்(ரலி) - நூல்: புகாரி)உங்களில் ஒருவர் சபைக்குச் சென்றால் ஸலாம் கூறட்டும். அங்கிருந்து எழ நாடும் போது ஸலாம் கூறட்டும். (அபூஹுரைரா(ரலி) - நூல்: அபூதாவுத்)இஸ்லாத்தில் சிறந்த அறம் எதுவென ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்ட போது (பசித்தோருக்கு) உணவளிப்பதும், தெரிந்தவர்களுக்கும், தெரியாதவர்களுக்கும் ஸலாம் கூறுவதாகும் என விடையளித்தார்கள். (அப்துல்லாஹ்பின் ஆஸ்(ரலி) - நூற்கள்: புகாரி, முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்கள் சபையில் நுழைந்த...முதல் மனிதர் : அஸ்ஸலாமுஅலைக்கும் எனக்கூறினார்.நபி(ஸல்) : பத்து நன்மைகள்! – என்றார்கள்.
இரண்டாமவர் : அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்மதுல்லாஹ் எனக்கூறினார். நபி(ஸல்) : இருபது நன்மைகள்! – என்றார்கள்.
மூன்றாமவர் : அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ!எனக்கூறினார்.நபி(ஸல்) : முப்பது நன்மைகள்!-எனப்பகர்ந்தார்கள். (அபூ தாவூத், திர்மிதி)

Comments:
இதையே யூதர்கள் ஷலோம் அல்லெஷெம் என்று கூறுவார்கள், பதிலுக்கு அல்லெஷெம் ஷலோம் என்று கூற வேண்டும்.
ஷலோம் என்று பெயர் வைத்துக் கொள்கிறார்கள் யூதர்கள், சலாம் என்று பெயர் வைத்துக் கொள்ளும் இசுலாமியரும் உண்டு.

சுவாரசியமான ஒற்றுமை. ஆனால், இரு மதத்தினருக்கும் ஒரே மூதாதையர் என்பதை எண்ணிடும்போது வியப்பு ஒன்றும் இல்லைதான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 
என்னுடன் வேலைப் பார்த்த யூத நண்பர் ஒருவர் டோண்டு சொன்னதை சொல்லியிருக்கிறார்.அவரின் கருத்துப் படி பரஸ்பர வெறுப்பு தான் யூத/முஸ்லீம் பிரச்சினைக்கு காரணம் .வெறுப்புக்கு ஒரு காரணமே இல்லை என்பார்.அவர் நண்பர் குழாமில் ஏமனைச் சேர்ந்த முஸ்லீம் அன்பரும் உண்டு.
மருதூரான் -உங்கள் பதிவு கண்டிப்பகா பாரட்டப்ப்ட வேண்டியது .தமிழ் மணத்தில் இஸ்லாம் வெறுப்பும் அதற்கான் எதிர்வினையாக "நீ மட்டும் ஒழுங்கா என்னும் கோஷமும் " இருக்கையில் மற்றவரை குறைச் சொல்லாமல் எழுதுகிறீர்.உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். சிலர் வம்புக்கு இழுப்பாங்க மாட்டிக்காதிங்க.
 
//அவரின் கருத்துப் படி பரஸ்பர வெறுப்பு தான் யூத/முஸ்லீம் பிரச்சினைக்கு காரணம் .வெறுப்புக்கு ஒரு காரணமே இல்லை என்பார்//

கடைசி தூதர் இங்கு தான் தோன்றுவார் என்று தம் வேதம் உறுதியாக சொல்வதை எதிர்பார்த்து அன்றைய யத்ரிப் நகரத்தில் (இன்றைய மதீனா) யூதர்கள் திரளாக குடியேறியதும் முஹம்மது என்கிற அந்த நபி தங்களால் வெறுக்கப்படும் இஸ்மவேலுடைய வம்சாவழியைச்சேர்ந்தவர் என்றறிந்த பின்னர் நிறைய யூதர்கள் திரும்பிவிட்டதும் வரலாற்றில் உண்டு. உண்டு.
 
//inomeno said...
வ.அன்சாரி,
ethu paravayillaiyaanu konjam pathu sollunga...//
koothaadi said
சிலர் வம்புக்கு இழுப்பாங்க மாட்டிக்காதிங்க.
 
POTHUVAAGA NAARADHARGALAI KANDAAL NAGARNTHUP POOVATHU NALLATHU THAAN
Ippadikku
NANBAN
 
காஷ்மிர் !
யுத்த பூமியில் நித்தமும் வெடிச் சத்தம்,
நிம்மதி இல்லா தூக்கம் !
அத்தனையும் பழகிய மக்கள்,
அன்றும் அப்படித்தான்
குலுங்கிய பூமியின்
கோரத்தாண்டவத்தை கூட ஏதோ
எல்லைச் சண்டையின்
இடிமுழக்கம் தான் இது என்று
இறக்கும் முன் எண்ணியிருப்பார்கள் !

சுனாமி நீரும், குழுங்கிய நிலமும்,
கும்பகோண நெருப்பும்,
நீர்-நிலம்-நெருப்பு என
அனைத்தும் பிஞ்சு குழந்தைகளின்
பச்சை இரத்தத்தை தான் அதிகமாக
குடிப்பதை பார்க்கும் போது,
இயலாமையால் கேட்கிறேன் !
இது,
இயற்கையின் பிழையா ?
இறைவனின் பிழையா ?
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]