Tuesday, June 29, 2010

 
சிறப்புமிக்க திக்ருகளும், துஆக்களும்

அல்லாஹ்வின் திருப்பெயரால்

இஸ்லாமியர்கள் தீமைகளில் விழுந்து விடாமல் தங்களை காத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அனைத்து நிலையிலும் ஏதாவது ஒரு விதத்தில் இறைவனை நினைவு கூர வேண்டும் என்று இறைவன் உபதேசிக்கின்றான். மட்டுமின்றி இறைவனின் நினைவில் திழைப்பவர்களே மிகவும் சிறந்தவர்கள் என்பதாக திக்ர் செய்பவர்களை மிகவும் புகழ்கின்றான்.

வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும் இரவு, பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடைய மக்களுக்குப் பல சான்றுகள் உள்ளன. அவர்கள் நின்றும், அமர்ந்தும், படுத்த நிலையிலும் அல்லாஹ்வை நினைப்பார்கள். (அல்குர்ஆன் 3 : 191)

அறிவுடையோர் எந்நேரமும் இறைநினைவை தங்களுடைய சிந்தையில் தக்க வைப்பார்கள் என்பதாக இறைவன் இந்த வசனத்தில் குறிப்பிடுகின்றான். இந்த இறைபயம் இருந்தால் தான் தீமைகளை விட்டும் விலகியே நிற்போம்

.
இதற்காகவே எண்ணற்ற திக்ர்களையும், துஆக்களையும் இன்னின்ன நேரத்தில் ஓதுங்கள் என்பதாக நபிகளார் கற்றுத்தந்துள்ளார்கள். எல்லா நேரத்திலும் ஓதும் படியாகவும் பல்வேறு திக்ர்களை துஆக்களை கற்றுத்தந்திருக்கின்றார்கள்.


சில ­ மார்க்க அறிஞர்கள் மகத்துவமிக்க திக்ர்கள் என்ற பெயரில் நபிகள் நாயகம் கற்றுத்தராத பல திக்ர்களை தங்களின் கற்பனைத்திறனால் உருவாக்கி மக்களுக்கு மத்தியில் உலாவ விட்டிருக்கின்றனர். நோய் தீர்க்க இந்த திக்ரை ஓதுங்கள் வியாபாரத்தில் பரக்கத், அபிவிருத்தி பெற இந்த திக்ரை ஓதவும் என்பதாக சில புத்தகத்திலும் கதை அளந்துள்ளார்கள். அதனுள் இருக்கும் இது போன்ற ஆதாரமற்ற திக்ர்களையும் துஆக்களையும் பல முஸ்­ம்கள் நம்பி ஓதிக் கொண்டிருக்கின்றனர். இது போன்ற எவ்வித ஆதாரமுமில்லாத திக்ர்களை ஓதுவதை விட நபிகள் நாயகம் அவர்களே தெளிவாக கூறியிருக்கின்ற, பல்வேறு சிறப்புகளை பெற்றுத்தருகின்ற சில துஆக்களையும் திக்ர்களையும் இங்கே தருகின்றோம். அவைகளை ஓதி அதிக நன்மைகளை பெற முயற்சி செய்வோமே.


1. சுப்ஹானல்லாஹில்அழீம், சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி.
பொருள்: கண்ணியமிக்க அல்லாஹ்வைத் துதிக்கின்றேன்; அவனைப் போற்றிப் புகழ்ந்து துதிசெய்கின்றேன்.
சிறப்பு: மீஜான் எனும் தராசில் அதிக கனமுள்ளது.(ஆதாரம் புகாரி6682)



2. லா இலாஹ இல்லல் லாஹ், வஹ்தஹு லாஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு வ லஹுல் ஹம்து, வ ஹுவ அலா குல்லி ஷய்இன் கதீர்
பொருள்: ”வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாரும் இல்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழ் அனைத்தும் உரியது. அவன் எல்லாவற்றிற்கும் வலிமையுடையவன்.
சிறப்பு: 100 நன்மைகள் எழுதப்படும்.100 தீமைகள் அழிக்கப்படும். ஷைத்தானிடமிருந்து பாதுகாப்பு கிடைக்கும். (ஆதாரம் புகாரி 3293)



3. ’சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி’ (100 முறை)
பொருள்: அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கின்றேன்.
சிறப்பு; கட­ன் நுரை அளவிற்கு பாவங்கள் இருந்தாலும் அனைத்தும் மன்னிக்கப்படும். (ஆதாரம் புகாரி 6405)



4. ’அல்ஹம்து ரி­ல்லாஹி ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹி’
பொருள்: தூய்மையும் வளமும் வாய்ந்த அதிகமான புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது.
சிறப்பு: 12 வானவர்கள் இதை இறைவனிடம் கொண்டு செல்ல போட்டி போடும் அளவிற்கு நன்மை அதிகம். (ஆதாரம் முஸ்­ம் 1051)



5. ’அல்லாஹு அக்பர் கபீரா, வல்ஹம்து ரி­ல்லாஹி கஸீரா, வ சுப்ஹானல்லாஹி புக்ரத்தவ் வ அஸீலா’
பொருள் : அல்லாஹ் மிகப் பெரியவன் என்று பெருமைப்படுத்துகிறேன். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது என்று அதிகமாகப் போற்றுகிறேன். அல்லாஹ் பரிசுத்தமானவன் என்று காலையிலும் மாலையிலும் அவனைத் துதிக்கிறேன்.
சிறப்பு: இதற்காக வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. இறையருள் கிடைக்கின்றன. (ஆதாரம் முஸ்­ம் 1052)


6. சுப்ஹானல்லாஹ், அல்ஹம்து ­ல்லாஹ், அல்லாஹூ அக்பர்.
பொருள்; இறைவன் தூயவன், அவனுக்கே எல்லாப்புகழும், அவன் மிகப்பெரியவன்.
சிறப்பு; ஒவ்வொரு வார்த்தைக்கும் தர்மம் செய்த நன்மை கிடைக்கும். (ஆதாரம் முஸ்­ம் 1181)



7. ’லாயிலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லாஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு வலஹுல் ஹம்து. வஹுவ அலா குல்ரி ஷையின் கதீர். அல்ஹம்துரில்லாஹி, வ சுப்ஹானல்லாஹி, வ லாயிலாஹ இல்லல்லாஹு. வல்லாஹு அக்பர். வ லா ஹவ்ல, வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்
பொருள் : (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் ஏகன்; அவனுக்கு இணையானவர் எவரும் இல்லை; ஆட்சியதிகாரம் அவனுக்குரியது; புகழ் அனைத்தும் அவனுக்கே உரியது; அவன் அனைத்தின் மீதும் ஆற்றல் உள்ளவன். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. அல்லாஹ் தூயவன்; அவனைத் தவிர வேறு இறையில்லை. அல்லாஹ் மிகப் பெரியவன்; அல்லாஹ்வின் உதவியின்றி பாவத்திரிருந்து விலகவோ நன்மை செய்யும் ஆற்றலோ இல்லை)’
சிறப்பு : உறக்கம் கலைந்தவர் இந்த துஆவை ஓதிய பின் துஆ கேட்டாலோ ஒழு செய்து விட்டு தொழுதாலோ அவைகள் இறைவனால் ஒப்புக் கொள்ளப்படும். (ஆதாரம் புகாரி 1154)



8. ’அஊது பி க­ரிமாத்தில் லாஹித் தாம்மாத்தி மின் ஷர்ரி மா கலக்’
பொருள் : அல்லாஹ்வின் முழுமையான சொற்களின் மூலம் அவனுடைய படைப்பினங்களின் தீங்கிரிருந்து நான் பாதுகாப்புக் கோருகிறேன்.
சிறப்பு ; ஓரிடத்தில் தங்கும் போது இதை ஓதினால் விஷ ஜந்துகளிடமிருந்து பாதுகாப்பு கிடைக்கும். ஆதாரம் முஸ்­ம் 5248



9, ‘அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வ அன்ன முஹம்மதன் அப்துல்லாஹி வரசூலுஹு
பொருள் : அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் உறுதிமொழிகிறேன்.
சிறப்பு ; ஒழு செய்த பின் இந்த திக்ரை கூறினால் சொர்க்கத்தின் எட்டு வாசல்களும் நமக்காக திறக்கப்படுகின்றன. நாம் விரும்பும் வாசல் வழியாக நுழைந்து கொள்ளும் பாக்கியத்தை பெறலாம். (ஆதாரம் முஸ்­ம் 394)



10. லா இலாஹ இல்லல்லாஹ்
பொருள் : ‘அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை’
சிறப்பு ; மேற்கண்ட வாக்கியத்தை உளமாற கூறுபவர் இறைவன் நாடினால் மறுமை நாளில் நபிகளாரின் பரிந்துரை பெறும் பாக்கியம் பெறுவார். ஆதாரம் புகாரி 99



11. ”லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்”
பொருள் : அல்லாஹ்வின் உதவியில்லாமல் (பாவங்கüலிருந்து) விலகிச் செல்லவோ (நல்லறங்கள்) புரிய ஆற்றல்பெறவோ மனிதனால் முடியாது
சிறப்பு : இந்த திக்ர் சொர்க்கத்தின் கருவூலங்களில் ஒரு கருவூலமாகும் என நபிகளார் கூறியிருக்கின்றார்கள். ஆதாரம் புகாரி 6384



12. ”அல்லாஹும்ம ! அன்த்த ரப்பீ. லா இலாஹ இல்லா அன்த்த. கலக்த்தனீ. வ அன அப்துக்க. வ அன அலா அஹ்திக்க, வ வஅதிக்க மஸ்ததஅத்து. அஊது பிக்க மின் ஷர்ரி மா ஸனஅத்து. அபூஉ லக்க பி நிஅமத்திக்க அலய்ய, வ அபூஉ லக்க பி தன்பீ. ஃபஃக்பிர்லீ. ஃபஇன்னஹு லா யஃக்பிருத் துனூப இல்லா அன்த்த”
பொருள்: அல்லாஹ்! நீயே என் அதிபதி. உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. நீயே என்னைப் படைத்தாய். நான் உன் அடிமை. நான் உனக்குச் செய்து கொடுத்த உறுதி மொழியையும் வாக்குறுதியையும் என்னால் இயன்ற வரை நிறைவேற்றியுள்ளேன்.
நான் செய்தவற்றின் தீமைகüலிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். நீ எனக்கு அருட்கொடைகளை வழங்கியுள்ளாய் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். மேலும், நான் பாவங்கள் புரிந்துள்ளதையும் உன்னிடம் (மறைக்காமல்) ஒப்புக்கொள்கிறேன். ஆகவே, என்னை மன்னிப்பாயாக! ஏனெனில், பாவத்தை மன்னிப்பவன் உன்னைத் தவிர வேறெவரும் இல்லை.
சிறப்பு : யார் இந்த திக்ரை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் பக­லோ இரவிலோ கூறிவிட்டு அதே நாளில் இறந்து விடுவாரோ அவர் சொôக்கவாசிகளில் ஒருவராக இருப்பார். ஆதாரம் புகாரி 6306



13. அஷ்ஹது அன் லாயிலாஹ இல்லல்லாஹூ வஹ்தஹூ லா ஷரீக லஹூ வ அன்ன முஹம்மதன் அப்துஹூ வரசூலுஹூ வக­மதுஹூ அல்காஹா இலா மர்யம் வ ரூஹூம் மின்ஹூ வல் ஜன்னது ஹக்குன் வன்னாரு ஹக்குன். 
பொருள் : ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை’ என்றும் ‘முஹம்மது அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்’ என்றும் ‘ஈசா (அலை) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்’ என்றும், ‘அல்லாஹ் மர்யமை நோக்கிச் சொன்ன (‘ஆகுக!’ என்னும்) ஒரு வார்த்தை(யால் பிறந்தவர்)’ என்றும், ‘அவனிடமிருந்து (ஊதப்பட்ட) ஓர் உயிர்’ என்றும், ‘சொர்க்கம் (இருப்பது) உண்மை தான்’ என்றும், ‘நரகம் (இருப்பது) உண்மை தான்’ என்று சாட்சியம் அளிக்கின்றேன்.
சிறப்பு : இந்த வாசகத்தை உளமாற கூறினால் இறைவன் அவரது அமல்களுக்கேற்ப சொர்க்கத்தில் புகுத்துவான். (ஆதாரம் புகாரி 3435)



14. ”அல்லாஹ்ýம்ம ரப்ப ஹாதிஹித் தஅவதித் தாம்மத்தி, வஸ்ஸலாத்தில் காயிமத்தி, ஆத்தி முஹம்மதனில் வசீலத்த, வல்ஃபளீலா. வப்அஸ்ஹு மகாமம் மஹ்மூதனில்லதீ வஅத்தா
பொருள் ; இறைவா! இந்த முழுமையான அழைப்பிற்கும், நிலைநிற்கவிருக்கும் தொழுகைக்கும் அதிபதியே! முஹம்மத் ஸல் அவர்களுக்கு மட்டுமே உரித்தான சொர்க்கத்தின் உயரிடத்தையும் தனிச் சிறப்பையும் அவர்களுக்குத் தந்தருள்வாயாக! அவர்களுக்கு நீ வாக்கüத்துள்ள உயர் அந்தஸ்திற்கு அவர்களை நீ அனுப்புவாயாக
சிறப்பு ; பாங்கு கூறிய பின் இந்த திக்ரை கூறி வந்தால் மறுமை நாளில் நபிகளாரின் பரிந்துரை கிடைக்கும். ஆதாரம் புகாரி 614



15. ’இன்னா ­ரில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் அல்லா ஹும்மஃஜுர்னீ ஃபீ முஸீபத்தீ வ அக்­ரிஃப் லீ கைரம் மின்ஹா’
பொருள் : (நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; அவனிடமே திரும்பிச் செல்பவர்கள் இறைவா, எனக்கேற்பட்ட இத்துன்பத்தை நான் பொறுமையுடன் ஏற்றதற்கு மாற்றாக எனக்கு நன்மையை வழங்குவாயாக!
சிறப்பு : இழப்புகள் ஏற்படும் போது இந்த துஆவை ஓதினால் அதை விட மிகச்சிறந்ததை இறைவன் நமக்கு வழங்குவான். ஆதாரம் முஸ்­ம் 1675



16. ஸுப்ஹானகல்லாஹும்ம வ பிஹம்தி(க்)க அஷ்ஹது அன் லாஇலாஹ இல்லா அன்(த்)த அஸ்தக்ஃபிரு(க்)க வஅதூபு இலைக்.
பொருள் : அல்லாஹ்வே…! நீ மிகத்தூய்மையானவன். உன்னைப் புகழ்கிறேன். உன்னைத் தவிர வேறு கடவுள் இல்லை என நான் உறுதியாக நம்புகிறேன். உன்னிடத்தில் மன்னிப்பைக் கோருகிறேன். உன்னிடத்தில் பிழை பொறுக்கத் தேடுகிறேன்.
சிறப்பு ; நம்முடைய சபைகளில் இந்த திக்ரை ஓதினால் சபையில் நிகழ்ந்த பாவங்களுக்கு பரிகாரமாக அமையும் என்று நபிகளார் கூறியுள்ளார்கள். ஆதாரம் அபூதாவூத் (4217)

Comments: Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]